FBI-யால் தீவிரமாக தேடப்படும் இந்தியர்: கொடுத்தால் ரூ9.6 கோடி பரிசுத் தொகை
FBI Announces 9 crore Reward For Indian Gangster: அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI-யின் தீவிரமாக தேடப்படும் முதல் 10 நபர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த கோல்டி பிரார் இடம் பெற்றுள்ளார்.
கோல்டி பிராரை பிடிக்க வலை வீசும் FBI
இந்தியாவின் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற சர்வதேச குற்ற கும்பலின் வட அமெரிக்க நடவடிக்கைகளை தலைமை தாங்கும் நபராக சதிந்தர்ஜீத் சிங் என்ற கோல்டி பிரார் உள்ளார் என அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI குற்றஞ்சாட்டி வருகிறது.
இவர் அமெரிக்கா மற்றும் கனடாவில் பல்வேறு கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் ஆகிய பல குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு இருப்பதாக FBI தெரிவித்துள்ளது.
மிகவும் ஆபத்தான நபராக FBI-யால் சித்தரிக்கப்படும் இந்த நபர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் பல தீவிரமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கோல்டி பிராரை இந்தியா, கனடா மற்றும் அமெரிக்க புலனாய்வு முகமைகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரூ. 9 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு
கோல்டி பிரார் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 50,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பரிசுத் தொகையானது 1 மில்லியன் டொலராக (அதாவது சுமார் ரூ 9.6 கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை லாஸ் ஏஞ்சல்ஸ் FBI நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் கோல்டி பிராரை கைது செய்வது மட்டுமே எங்களை முதன்மையான முன்னுரிமை என்றும் FBI அதிகாரி பேட்ரிக் கிராண்டி தெரிவித்துள்ளார்.