ரூ.5 லட்சத்திற்கு கடன் வாங்கினால் Personal Loan -ல் EMI குறைவா? FD Loan -ல் EMI குறைவா?
பர்சனல் லோன் மற்றும் FDக்கு எதிராக வாங்கப்படும் கடன்களில் எதில் குறைவான EMI கிடைக்கிறது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனியார் அல்லது அரசு வங்கியில் Personal Loan வாங்கினால் வட்டி விகிதம் (Interest rate) 12 சதவீத முதல் 25 சதவீதம் வரை இருக்கும்.
அதேபோல Fixed Deposit இருந்தால் அதனை நீங்கள் அடமானமாக வைத்து கடன் வாங்கலாம். அதாவது உங்களுடைய Fixed Deposit -ல் ரூ.5 லட்சம் இருந்தால் அதில் இருந்து 90 முதல் 95 சதவீதத்தை கடனாக பெறலாம்.
இதில் உங்களது Personal Loan காட்டிலும் Fixed Deposit தொகைக்கு எதிராக நீங்கள் வாங்கும் கடன் மலிவானது. அதே சமயம் Fixed Deposit கடனுக்கு Processing Fee கிடையாது.
FD Loan Interest rate
Fixed Deposit தொகைக்கு எதிராக நீங்கள் வாங்கும் கடனுக்கு Fixed Deposit -க்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அதிகமாக வசூலிக்கப்படும்.
உதாரணமாக SBI 5-வருட FDல் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 6.50% வட்டியாக கிடைக்கும். இதுவே நீங்கள் இந்த தொகையை அடமானமாக காட்டி வாங்கும் கடனுக்கு 7.50 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வசூல் செய்யப்படலாம்.
உங்களது Fixed Deposit Maturity ஆவதற்கு முன்பு இந்த கடனை நீங்கள் செலுத்தியிருக்க வேண்டும். அதனை தவறவிட்டால் கடன் தொகை Fixed Deposit தொகையில் ஈடு செய்யப்படும்.
FD Loan vs Personal Loan
SBI வங்கியானது FD Loan மற்றும் Personal Loan-க்கு வழங்கும் வட்டி விகிதங்களை வைத்து ஒப்பிட்டு பார்க்கலாம்.
SBI Personal Loan -களுக்கு வட்டி விகிதம் 11.15%–15.30% வசூல் செய்கிறது. அதாவது, 5 வருட காலத்திற்கு ரூ.5 லட்சம் கடனை வாங்கினால் உங்களுடைய EMI ரூ.10,909- 11,974 ஆக இருக்கும்.
மேலும், வங்கி கட்டணங்கள் 1.50 சதவீதம் (குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15,000 வரை)
அதேபோல 5-வருட SBI FD வட்டி 6.50 சதவீதம் ஆகும். இதில் கடன் வாங்கினால் 2 சதவீதம் அதிக வட்டி விகிதத்தில் பெறுவார்கள். அதன்படி 8 சதவீதம் ஆகும்.
அந்தவகையில், 5 வருட காலத்திற்கு ரூ.5 லட்சம் கடனை வாங்கினால் உங்களுடைய EMI ரூ.10,258 ஆக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |