கோவிட்-19 தடுப்பூசியால் பறிபோன 3 இளம் பெண்கள் உயிர்: FDA ரகசிய அறிக்கையில் தகவல்
FDA secret links 3 Women’s Deaths to Possible COVID-19 Vaccine Side Effects: கோவிட் தடுப்பூசி காரணமாக 3 இளம்பெண்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ரகசிய அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசியால் பறிப்போன பெண்கள் உயிர்
கடந்த 2021ம் ஆண்டு இரண்டாவது தவணை mRNA கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொண்ட மூன்று இளம் பெண்கள் இதயப் பாதிப்புகளால் உயிரிழந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ரகசிய அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு வாரங்களுக்கு 10,20 மற்றும் 21 வயதுடைய 3 மூன்று பெண்களுக்கும் உடல் நல குறைவுகள் ஏற்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் Pfizer-BioNTech என்ற தடுப்பூசியையும், ஒருவர் Moderna என்ற தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த தடுப்பூசிகளால் 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு பெண்களுக்கு Myocarditis என்ற இதயத் தசை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
19 வயது பெண் இதய செயலிழப்பு அதனை தொடர்ந்து பல்வேறு உறுப்பு செயலிழப்புகளால் உயிரிழந்துள்ளார்.
மூவரின் உயிரிழப்புக்கு வைரஸ் தொற்றின் பிற காரணங்களையும் நிராகரிக்க முடியாததால், மூவரின் உயிரிழப்புக்கும் தடுப்பூசி தான் என்று வகைப்படுத்த முடியாமல் FDA ஆய்வாளர்கள், உயிரிழப்புகளுக்கு தடுப்பூசிகளும் சாத்தியமான ஒரு காரணமாக இருக்கலாம் என்று விவரித்துள்ளனர்.
தடுப்பூசிகள் மற்றும் கோவிட் கால மரணங்கள் தொடர்பான பல்வேறு மதிப்பீடுகள் தொடர்பு இல்லாதவையாகவும், மதிப்பிட முடியாதவையாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.