செர்னோபில் அணுமின் நிலையத்தில் அபாயம்! உக்ரைன் எச்சரிக்கை
ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் வெடிமருந்துகள் வெடிக்கும் அபாயம் இருப்பதாக உக்ரைனின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளதாக அந்நாட்டின் துணைப் பிரதமர் Vereshchuk தெரிவித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு உலகின் மிக மோசமான அணு உலை விபத்து நடந்த இடமான இந்த ஆலை, உக்ரைன் மீதான படையெடுப்பின் ஒரு பகுதியாக கடந்த மாதம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
ஆலையைக் கைப்பற்றிய பிறகு, கதிர்வீச்சு இயல்பான அளவில் இருப்பதாகவும், அணுமின் நிலையத்தில் கதிர்வீச்ச ஏற்படுத்த உக்னை் படைகளால் முன்னெடுக்கப்பட்ட சதிதிட்டங்களை முறியடித்ததாக ரஷ்யா கூறியது.
நடுவானில் ரஷ்ய போர் விமானத்தை தவிடுபொடியாக்கிய உக்ரைன்! வீடியோ ஆதாரம்
இந்நிலையில், நேற்று இஸ்தான்புலில் நடந்த ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிரமாங்களுக்கு 97 மனிதாபிமான வழித்தடங்களை நிறுவ அனுமதிக்குமாறு கேட்டுள்ளதாக Vereshchuk தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக செர்னோபில் மண்டலத்தை ராணுவமற்ற பகுதியாக அக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் அணுசக்தி பேரழிவு மீண்டும் நிகழும் அபாயத்தை அகற்ற சிறப்பு ஐ.நா நடவடிக்கைளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.