எரிவாயு அடுப்புகள் தடை செய்யப்படலாம்: வெளியான பின்னணி
சிறார்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் எரிவாயு அடுப்புகளை தடை செய்ய அமெரிக்க நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
எரிவாயு அடுப்பு பயன்பாடு
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையர் கூறுகையில், எரிவாயு அடுப்பு பயன்பாடு என்பது ஒரு வெளிப்படுத்தப்படாத ஆபத்து என்றார்.
நுகர்வோருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த பொருளையும் தடை செய்ய சட்டத்தில் இடம் உண்டு என குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
@AP
மேலும், எரிவாயு அடுப்புகள் தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக சில மாதங்களாக ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிவாயு அடுப்புகள் ஏற்படுத்தும் மாசினால் ஆஸ்துமா மற்றும் மோசமான சுவாச பிரச்சனைகளும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், குடியிருப்புக்குள் எரிவாயு அடுப்புகள் பயன்பாடானது சிறார்கள் ஆஸ்துமா பாதிப்புக்கு இலக்காவதை உறுதி செய்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
35 சதவீத குடும்பங்கள்
அமெரிக்காவில் தற்போதைய குழந்தைப் பருவ ஆஸ்துமாவில் கிட்டத்தட்ட 13% எரிவாயு அடுப்பு உபயோகத்தால் ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 35 சதவீத குடும்பங்கள் எரிவாயு அடுப்பைப் பயன்படுத்துகின்றன,
@getty
மேலும் கலிபோர்னியா மற்றும் நியூ ஜெர்சி போன்ற சில மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 70% ஐ நெருங்குகிறது. இந்த அடுப்புகள் குறிப்பிடத்தக்க அளவு நைட்ரஜன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடை வெளியிடுகின்றன என்றே சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் புதிதாக கட்டுமானப் பணிகளில் இருக்கும் கட்டிடங்களில் இயற்கை எரிவாயு அமைப்புகளை தடை செய்யவும் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.