ஊழல் குறித்து ஜெலென்ஸ்கி பதிலளிக்க வேண்டும்: பதவிநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்
Fedorov says zelensky will answer for corruption: உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஊழல் குறித்து பதிலளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
உக்ரைனில் ட்ரோன் போர்முறையில் ஒரு புரட்சியை வழிநடத்தியவரும், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போட்டியாளராகவும் கருதப்படுபவர் மைக்கலோ ஃபெடோரோவ்.
பதிலளிக்க வேண்டிய கேள்விகள்
உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைவருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சராக இருந்த இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மைக்கலோ ஃபெடோரோவ் தற்போது ஊழல் குறித்து ஜனாதிபதி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன எனக் கூறியுள்ளார்.
ஃபெடோரோவ் காணொளி ஒன்றில், 'உக்ரைனியர்கள் எப்போது தங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை புடின் தீர்மானிக்க நாம் அனுமதிக்கக் கூடாது' எனக் கூறியுள்ளார்.
ஜெலென்ஸ்கி தயாராக இருக்கிறார்
மேலும் ஊழல் குறித்து பேசும்போது, "இதுபோன்ற கேள்விகளுக்கு அவர் (ஜெலென்ஸ்கி) தயாராக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
இவை அனைத்தும் அவருக்குத் தெரிந்திருந்ததா? இல்லையா? என்பதை நம் அனைவருக்கும் சொல்வது அவருடைய பொறுப்பு. நான் எந்த அனுமானங்களையும் செய்ய விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடனான போர் 5வது ஆண்டாக தொடரும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளால் உக்ரைன் அதிர்ந்துபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |