சென்னைக்கு வரப்போகும் ஆபத்து.., வங்கக்கடலில் உருவாகிறதா ஃபெங்கல் புயல்?
வங்கக்கடலில் உருவாகியுள்ள சுழற்சி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறினால் இலங்கை மற்றும் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஃபெங்கல் புயல்?
வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளளது.
இந்த சுழற்சி நவம்பர் 23 -ம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர், அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால், நவம்பர் 26 -ம் திகதி அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால், படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறினால் இலங்கை மற்றும் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அவ்வாறு புயல் உருவாகினால் இந்த சீசனில் உருவாகும் இரண்டாவது புயலாகும். இந்த புயலுக்கு ஃபெங்கல் (Fengal) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை சவுதி அரேபியா முன்மொழிந்துள்ளது.
இந்த பெங்கல் (Fengal) புயலானது சென்னைக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னையை கடந்து செல்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்றும் சில வானிலை பதிவர்கள் கூறுகின்றனர்.
புயலாக மாறும் பட்சத்தில் வேகம் மற்றும் திசையைப் பொருத்து மழையின் தாக்கம் மாறுபடும். இதனால், வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |