அடர்த்தியான கூந்தலை பெற இந்த இரண்டு பொருட்கள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் தேங்காய் எண்ணெயுடன் இந்த இரண்டு பொருள் போதும்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- செம்பருத்தி- 5
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
பின் அடுத்த நாள் ஊறவைத்த வெந்தய விதையில் செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகளை கலந்து மென்மையான பேஸ்ட்டைபோல் அரைக்கவும்.
இதனை உங்கள் தலைமுடியில் தடவி உலர்த்திய பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.
இந்த அற்புதமான ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு வளரும்.
இவ்வாறு வீட்டில் எளிதாகக் கிடைக்கும் வெந்தயம் மற்றும் செம்பருத்தியை பயன்படுத்தி தலைமுடியின் அழகை அதிகரிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |