அடிக்கும் வெயிலுக்கு பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
வெயில் காலம் வந்துவிட்டாலே உடல் குளிர்ச்சியாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம் என்ன செய்யலாம் என்று தான் பலரும் யோசிப்பார்கள்.
தர்பூசணி, முலாம் பழம், மோர் போன்ற பழங்கள் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். ஆனால் இதை எல்லாம் பணமாக கொடுத்து கடையில் தான் வாங்க முடியும்.
அதற்கு பதிலாக வீட்டில் எப்போதும் இருக்கக்கூடிய பழைய சோற்றை சாப்பிடுவதாலும் கோடை வெயிலில் இருந்து விடுப்படலாம்.
மீதமுள்ள சாதத்தில் தண்ணீர் ஊற்றி குளிரூட்டியில் வைத்தால் பழைய சோறு தயாராகி விடும். இதை மறுநாள் காலையில் தயிர், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
அந்தவகையில் பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கிடைக்கும் நன்மைகள்
- பழைய சோற்றில் உள்ள விட்டமின் சி ஆனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- தினமும் காலையில் இதை சாாப்பிட்டால் எப்போதும் இளமையான தோற்றதுடன் இருக்கலாம்.
- வெப்பத்தினால் ஏற்படும் வயிற்று கோளாறு பிரச்சினையை பழைய சோறு சாப்பிடுவதால் தடுக்கலாம்.
- நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுப்படலாம்.
- தினமும் சாப்பிட்டு வருவதால் உடல் சோர்வு குறைந்து எப்போதும் உற்சாகத்துடன் இருக்கலாம்.
- என்றும் இளமையாகும் பொலிவாகவும் இருப்பதற்காக இதை சாப்பிடலாம்.
- இதை காலையில் எடுத்துக்கொள்வதால் செரிமான பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
- உடல் எடையை குறைக்க அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இதை சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |