சருமத்தில் உள்ள கருமையை ஒரே நாளில் நீக்கும் தக்காளி; பயன்படுத்துவது எப்படி?
சருமத்தில் உள்ள கருமையை நீக்கி எப்போதும் சுத்தமான சருமத்துடன் இருக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா?
அதற்கான ஒரே தீர்வு தான் தக்காளி. தக்காளியில் பல அற்புத குணங்கள் காணப்படுகின்றன. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருக்கிறது.
இது முகத்தில் உள்ள கருமையை போக்கவும் உதவுகிறது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே முகத்தில் உள்ள கருமையை போக்க தக்காளியை எப்படி பயன்படுத்தலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
01. தக்காளி, ஓட்ஸ், தயிர்
முதலில் தக்காளியை மசித்து எடுத்து, அதில் ஓட்ஸ், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பின் இதை கருமையான இடத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விடவும்.
இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவி எடுத்தால் சருமத்தில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம். இதை வாரத்திற்கு மூன்று முறை செய்து வருவது நல்லதாகும்.
02. தக்காளி, யோகர்ட், எலுமிச்சை
முதலில் தக்காளியில் உள்ள ஜூஸ் எடுத்து தனியாக வைக்கவும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் யோகர்ட் சேர்த்து கலந்துக்கொண்டு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
இதை சாதாரண தண்ணீரில் கழுவி எடுத்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம். மற்றும் இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்வது நல்லதாகும்.
03. தக்காளி, முல்தானி மெட்டி
முதலில் தக்காளியை மசித்து அதில் முல்தானி மெட்டி சேர்த்து கலந்துக்கொள்ளவும். இழதை சருமத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விட்டு, அதாவது முக அசைவுகள் கூடாது.
பின் 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும்.
04. தக்காளி, பால்
முதலில் தக்காளியை மசித்து ஆறு ஸ்பூன் பால் சேர்க்கவும்.
பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு விட்டு தண்ணீரில் கழுவினால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
05. தக்காளி, பால், கற்றாழை
முதலில் ஒரு தக்காளியை மசித்து அதில் பால் மற்றும் கற்றாழை சாறு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |