300 பேருடன் சென்ற கப்பலில் தீவிபத்து: நடுக்கடலில் மீட்புப்பணி தீவிரம்
ஸ்வீடன் கடற்கரையில் 300 பேர் கொண்ட பயணிகள் கப்பல் தீப்பிடித்தது.
கப்பலில் இருந்த பயணிகளை பத்திரமாக வெளியேற்றும் பணி தொடங்கபட்டுள்ளது.
ஸ்வீடன் கடற்கரையில் 300 பேருடன் இருந்த பயணிகள் கப்பல் தீப்பிடித்து எரிவதாக ஸ்வீடிஷ் கடல் அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒரு பெரிய மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏழு கப்பல்கள் அனுப்பப்பட்டு, கப்பலை வெளியேற்றும் பணி தொடங்கியது என்று ஸ்வீடிஷ் கடல்சார் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ஜோனாஸ் ஃபிரான்சன் கூறியுள்ளார்.
Twitter @carlasignorile
காயங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை மற்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
"தீ கட்டுக்குள் உள்ளது" என்று மற்றொரு செய்தித் தொடர்பாளர் லிசா ம்ஜோர்னிங் தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது
ஸ்டெனா ஸ்காண்டிகா (MS Stena Scandica) என்ற அந்தக் கப்பல் ஸ்வீடனின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள கோட்ஸ்கா சாண்டன் தீவில் அமைந்துள்ளது.