உரங்களின் விலை உயர்வு: விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க ஏற்பாடு: ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
உரங்களின் விலை உயர்வு காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசர நிதி உதவியை விரைவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
உச்சத்தை தொட்ட உரங்களின் விலை
மத்திய கிழக்கில் நிலவி வரும் அதிகப்படியான பதற்றம் இதனால் எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக உரங்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் உரங்களின் விலை உயர்வு காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் அவசரகால நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளது.

விவசாயிகளுக்கான நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான புதிய அதிகாரத்தை பெற்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில், விரைவில் இது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒப்பந்தம் ஒன்றை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான இறுதி முடிவை ஜூன் 17, 2026 அன்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் எடுத்தது. அதில் பொது வேளாண் கொள்கையின் கீழ் உறுப்பு நாடுகளாக உள்ளவர்கள் உடனடியாக விவசாயிகளுக்கான நிதி உதவி வழங்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணையத்தின் முன்மொழிவை ஐரோப்பிய கவுன்சில் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையானது நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய விவசாயிகளுக்கு தற்காலிக தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |