2030, 2034 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் எங்கு நடக்கும்? உறுதி செய்த FIFA
2030, 2034 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை எந்தெந்த நாடுகள் நடத்தவுள்ளன என்பதை FIFA உறுதிசெய்துள்ளது.
2030 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ நடத்துகிறது.
அதனையடுத்து, 2034 உலகக் கோப்பை போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை புதன்கிழமை இரவு FIFA வெளியிட்டது.
சவுதி அரேபியா மட்டுமே 2034 உலகக் கோப்பைக்கு ஏலம் எடுத்திருந்தது.
இந்நிலையில், சூரிச்சில் நடைபெற்ற ஐ.நா.வின் சிறப்புக் கூட்டத்துக்குப் பிறகு, சவுதி அரேபியாவை அதிகாரப்பூர்வமாக Host-ஆக அதிபர் கியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதள பதிவில், தனது நாட்டின் உலகக் கோப்பை கனவு நனவானது என்றும் போர்ச்சுகல் 2030 உலகக் கோப்பையை நடத்துவதில் பெருமைப்படுவதாகவும் பகிர்ந்துள்ளார்.
2030 உலகக் கோப்பையின் முதல் போட்டியை உருகுவே நடத்துவார்கள். திறப்பு விழாவும் இந்த நாட்டில் நடைபெறும். உருகுவேயைத் தவிர, அர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகிய நாடுகளும் 2030 உலகக் கோப்பையில் தலா ஒரு போட்டியை நடத்தும்.
அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |