கால்பந்து உலக கோப்பையில் திடீரென விதிகளை மாற்றிய கத்தார்: ஐரோப்பிய நாடுகள் மீது FIFA தலைவர் பாய்ச்சல்!
உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துவதை மேற்கத்திய நாடுகள் விமர்சிக்க கூடாது, அதே சமயம் ஐரோப்பா தங்கள் சொந்த வரலாற்றுக்காக அடுத்த 3000-ம் ஆண்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கால்பந்து சர்வதேச நிர்வாக குழுவான ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
திடீரென மாற்றப்பட்ட விதிகள்
2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சிறிய மத்திய கிழக்கு நாடான கத்தார், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்துவது மற்றும் LBGTQ உரிமைகள் மீதான அதன் அணுகுமுறைக்காக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
FIFA president Gianni Infantino says the West is in no position 'to give moral lessons' to Qatar, adding that European nations should instead apologise for their own histories.
— Sky News (@SkyNews) November 19, 2022
Read more here ? https://t.co/k4QvT4osug
? REUTERS/Matthew Childs pic.twitter.com/XNiiaifc77
அத்துடன் போட்டி நடைபெறும் அனைத்து கால்பந்து மைதானங்களிலும் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிப்பதாக கத்தார் நாட்டு அரசாங்க அதிகாரிகள் கடைசி மணி நேரங்களில் விதிகளை மாற்றி அறிவித்தனர்.
இந்த திடீர் நடவடிக்கையால் இதுவரை வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் பற்றிய கவலைகளும் எழுவதாக குற்றச்சாட்டுகள் வெளிவர தொடங்கியுள்ளது.
ஐரோப்பா மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த நிலையில் கால்பந்து போட்டியின் தொடக்கத்தை குறிப்பதற்கான செய்தி மாநாட்டில் பேசிய கால்பந்து சர்வதேச நிர்வாகக் குழுவின் ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ, கத்தார் கால்பந்து போட்டிகள் குறித்து விமர்சிக்கும் விமர்சகர்கள், மக்களுக்கு தார்மீக பாடங்களை கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
FIFA President Gianni Infantino at news conference in Doha: “Today I feel Qatari. Today I feel Arab. Today I feel African. Today I feel gay. Today I feel disabled. Today I feel a migrant worker” pic.twitter.com/GozWBXd1Fd
— Dan Roan (@danroan) November 19, 2022
கடந்த 3,000 ஆண்டுகளில் ஐரோப்பியர்களாகிய நாங்கள் உலகம் முழுவதும் என்ன செய்து வருகிறோம் என்பதற்காக, அடுத்த 3,000 ஆண்டுகளில் மக்களுக்கு தார்மீக பாடங்களைக் கொடுக்கத் தொடங்குவதற்கு முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
“அத்துடன் நான் இன்று கத்தாரியனாக உணர்கிறேன், நான் இன்று அரபியனாக உணர்கிறேன், நான் இன்று ஆப்பிரிக்கனாக உணர்கிறேன். நான் இன்று ஓரினச்சேர்க்கையாளராக உணர்கிறேன். நான் ஊனமுற்றவனாக உணர்கிறேன். நான் இன்று ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாக உணர்கிறேன்”.
நிச்சயமாக நான் கத்தாரியனோ, நான் ஒரு அரேபியனோ, ஆப்பிரிக்கனோ அல்ல, ஆனால் நான் அப்படி உணர்கிறேன், ஏனென்றால் வெளிநாட்டில் வெளிநாட்டவராக பாகுபாடு காட்டப்படுதல், கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியும் என கியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
FIFA President Gianni Infantino on Europe's criticism of the Qatar World Cup. pic.twitter.com/7LkOXAKcAv
— ESPN FC (@ESPNFC) November 19, 2022
நாடுகளை சுட்டிகாட்டிய ஃபிஃபா தலைவர்
கால்பந்து போட்டி நடைபெறும் மைதானங்களில் மது விற்பனை செய்வதில் கத்தாரின் கடைசி நிமிட யு-டர்ன், மற்ற உறுதி மொழிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த உலக கோப்பை கால்பந்து போட்டி 200% கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறேன் என கியானி இன்ஃபான்டினோ ஸ்கை நியூஸிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்காட்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள மைதானங்களில் இதேபோன்ற தடைகள் நடைமுறையில் இருந்ததை சுட்டிக்காட்டினார்.