கத்தாரில் களைகட்டும் உலக கோப்பை கால்பந்து போட்டி: ரசிகர்களுக்கான விதிமுறைகள் என்னென்ன?
2022ம் ஆண்டுக்கான FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் நிலையில், போட்டியை பார்வையிட வரும் ரசிகர்களுக்கு சில விதிமுறைகளை அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரசிகர்களுக்கான விதிமுறைகள்
கால்பந்து போட்டியை பார்வையிட கத்தாருக்கு வருகை தரும் நபர்கள் ஹயா எனும் சிறப்பு பாஸ் மற்றும் போட்டிக்கான டிக்கெட்டுகள் வைத்திருக்க வேண்டும்.
டிக்கெட்கள் வைத்து இருப்பவர்கள் ஒவ்வொருவரும் மூன்று பேர்கள் வரை தங்களுடன் அழைத்து செல்லலாம். ஆனால் அவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக 500 ரியால் வசூலிக்கப்படும்.
21வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டினர் கத்தாரில் மது அருந்தவும், போதைப் பொருட்களை கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சி மற்றும் ஆபாசம் சார்ந்த எந்தவொரு பொருளையும் கொண்டு வர வேண்டாம் என்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமில்லை, ஆனால் பெண்கள் தோள்பட்டை முதல் முழங்கால் வரை மறைக்கும் ஆடைகள் அணிய வேண்டும்.
கால்பந்து போட்டிக்காக கத்தார் வரும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானால், பொலிஸாரை தொடர்பு கொள்வதற்கு முன்பு தங்கள் நாட்டு தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கத்தாரில் தன்பாலின உறவுகள் குற்றம் என்றாலும், LGBT உட்பட திருமணமாகாத வெவ்வெறு பாலினங்கள் ஒரே அறையில் தங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் திருமணமானவர்கள் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கத்தார் அரசாங்கத்தின் ஏற்பாடுகள்
கால்பந்து போட்டி ஆரம்பமான முதல் இரண்டு வாரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
போட்டி நடைபெறும் முக்கிய பகுதிகளுக்கு ரசிகர்கள் சுலமாக செல்வதற்காக சுமார் 3000 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getting #FIFAWorldCup ready! ?#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/66n41BgIuQ
— FIFA World Cup (@FIFAWorldCup) November 16, 2022
தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் சென்றால் 500 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகள்
கத்தாரில் கொரோனா தடுப்பூசிகள் கட்டாயமில்லை என்றாலும், நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் தங்களது பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிசிஆர் சோதனை அல்லது 24 மணி நேரத்திற்குள் ஆன்டிஜென் சோதனை எடுத்து இருக்க வேண்டும்.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ரசிகர்கள் முதல் 10 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.