கத்தார் உலகக் கோப்பை... ஃபிஃபா அமைப்பு உறுதி செய்த இன்னொரு துயரமான செய்தி
கத்தார் உலகக் கோப்பை கால்பந்தாட்டம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், ஃபிஃபா அமைப்பு இன்னொரு புலம்பெயர் தொழிலாளி மரணம் தொடர்பில் உறுதி செய்துள்ளது.
ஃபிஃபா அமைப்பு உறுதி
சவுதி அரேபியா தேசிய கால்பந்து அணியின் பயிற்சி முகாமாக மாற்றப்பட்டிருந்த ஹொட்டல் ஒன்றின் பராமரிப்பு ஊழியரே மரணமடைந்த நபர். பிலிப்பைன்ஸ் நாட்டவர் எனவும், 40 வயது கடந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாகன விபத்தில் சிக்கி அந்த நபர் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டாலும், இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், ஃபிஃபா அமைப்பு குறித்த தொழிலாளியின் மரணத்தை உறுதி செய்துள்ளதுடன், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளது.
@getty
மேலும், குறித்த மரணம் தொடர்பில் தெரியவந்ததும், உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் திரட்டியுள்ளதாக ஃபிஃபா குறிப்பிட்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை தொடர்பில் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் 6,000 பேர்களுக்கும் மேலாக இதுவரை மரணமடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கத்தார் நிர்வாகம் வெறும் 40 பேர்கள் மட்டுமே மரணமடைந்ததாக கூறி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தான் 400 முதல் 500 பேர்கள் வரையில் மரணமடைந்திருக்கலாம் என ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.