பெனால்டி ஹீட் அவுட்டில் அவுஸ்திரேலியாவை வீழ்திய எகிப்து :92 ஆண்டுகளுக்கு பிறகு படைக்கப்பட்ட வரலாறு
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி எகிப்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சமனில் முடிந்த போட்டி
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய நாக் அவுட் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் எகிப்து அணிகள் மோதின.
டல்லாஸ் மைதானத்தின் நடைபெற்ற இந்த போட்டியில் 13 வது நிமிடத்தில் எகிப்து வீரர் இமாம் அஷூர் கோல் அடித்து அசத்தினார்.
துரதிர்ஷ்டவசமாக போட்டின் 55வது நிமிடத்தில் எகிப்து அணி வீரர் முகமது ஹானி எதிர்பாராதவிதமாக சொந்த அணியின் கோல் வலையிலேயே பந்தை அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமனில் கொண்டு வந்தார்.
Egypt have defeated Australia!
— Moments & memories (@momentmemori) July 3, 2026
For the first time since 1934, Egypt won a FIFA World Cup knockout match. pic.twitter.com/fbF5gyOl0y
ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை இரு அணிகளின் கோல் எண்ணிக்கையும் சமனில் இருந்ததால் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்க பெனால்டி ஹீட் அவுட் முறை நடத்தப்பட்டது.
வரலாறு படைத்த எகிப்து
பெனால்டி ஹீட் அவுட் முறையை சரியாக பயன்படுத்தி கொண்ட எகிப்து வீரர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட 4 வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றி அசத்தினர்.
ஆனால் அவுஸ்திரேலிய வீரர்கள் 4 வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே கோல்களாக மாற்றினர்.

இதன் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நாக் அவுட் சுற்றில் எகிப்து அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் 92 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1934ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக எகிப்து அணி பிஃபா உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |