1 பில்லியன் டொலர் பரிசு தொகை - ஃபிபா கிளப் உலகக்கோப்பை குறித்து வெளியான அறிவிப்பு
ஃபிபா கிளப் உலகக்கோப்பைக்கு பரிசுத்தொகையாக 1 பில்லியன் டொலர் வழங்கப்பட உள்ளது.
ஃபிபா கிளப் உலகக்கோப்பை
ஃபிபா கிளப் உலககோப்பை, இந்த ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி தொடங்கி ஜூலை 15 ஆம் திகதி வரை, அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் 32 அணிகள் கலந்து கொள்ள உள்ள நிலையில், இதற்கான மொத்த பரிசுத்தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்(இந்திய மதிப்பில் ரூ.8700 கோடி) வழங்கப்பட உள்ளது.
இதில், வெற்றிபெறும் அணிக்கான பரிசுத்தொகை மற்றும் மற்றும் யார் யாருக்கு எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அணிகளின் செயல்திறன் அடிப்படையில், பரிசுத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒளிபரப்பு உரிமம்
இதற்கான உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை லண்டனை தளமாக கொண்ட DAZN நிறுவனம், இதே அளவிலான தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
இதன் 63 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மூலம், 500 மில்லியன் டொலர் அளவுக்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"போட்டியின் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயும் பங்கேற்கும் கிளப்புகளுக்கும், உலகம் முழுவதும் உள்ள கிளப் ஒற்றுமை மூலமாகவும் பகிர்ந்தளிக்கப்படும்" என ஃபிஃபா தலைவர் கியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார்.
மேலும் 2028 ஆம் ஆண்டு பெண்கள் கிளப் உலகக்கோப்பை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |