ரொனால்டோவின் அல் நஸர் அணிக்கு தடை!
அல் நஸர் அணிக்கு புதிய வீரர்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய வீரர்களுக்கான ஒப்பந்தம்
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி, கடந்த 2018ஆம் ஆண்டில் Leicester City அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.
ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டொலர்களை செலுத்த அல் நஸர் தவறிவிட்டது.
அதனைத் தொடர்ந்து FIFA 2021ஆம் ஆண்டில் பணத்தை செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது.
அல் நஸருக்கு பிபா தடை விதிப்பு
இந்த நிலையில், இந்த கோடையில் எந்த புதிய வீரர்களையும் தங்கள் அணியில் சேர்க்க அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது மூன்று தொடர்ச்சியான பரிமாற்ற சாளரங்களுக்கு நீடிக்கும் என்றும் பிபா கூறியது.
ஆனால், தடையை நீக்கும் பொருட்டு அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் PIF (Public Investment Fund) தெளிவுபடுத்தியுள்ளது.
அகமது முசா அல் நஸர் அணிக்காக 2018-20 ஆண்டுகளில் 9 கோல்கள் அடித்துள்ளார். தற்போது இவர் Sivasspor அணியில் விளையாடி வருகிறார்.
நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |