அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: ஃபிபா அதிரடி
2026ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது பிபா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அர்ஜென்டினாவிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை
நடந்து முடிந்த 2026 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பல்வேறு விதிமீறல் நடந்து இருப்பதாக அர்ஜென்டினா அணி நிர்வாகம் மீது ஃபிபா ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
அர்ஜென்டினா அணி கலந்து கொண்ட பல்வேறு போட்டிகளில் இத்தகைய விதிமீறல்கள் நடைபெற்று இருப்பதாக கூறி ஃபிபா இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதில், பாரபட்சமான கோஷங்கள் மற்றும் சைகைகள், போட்டியை தாமதமாக தொடங்குதல், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற தவறுதல், பார்வையாளர்கள் மைதானத்தில் பொருட்களால் வீசுதல் ஆகியவை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வீரர் மீது நடவடிக்கை
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்ட குறிப்பிட்ட வீரர்கள் மீது தனிப்பட்ட நடவடிக்கைகளை பிபா தொடங்கியுள்ளது.
அதில் குறிப்பாக, அர்ஜென்டினா அணியின் நாகுவல் மொலினா, லியாண்ட்ரோ பரேடெஸ், தியாகோ அல்மாடா மற்றும் உதவி பயிற்சியாளர் ராபர்டோ அயலா.
மற்றும் ஸ்பெயின் அணி வீரரான பாப்லோ மார்ட்டின் பாயிஸ் கவிரா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டானது சுமத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |