FIFA உலகக் கோப்பையில் வீரர்கள் பெண்களின் உள்ளாடையை அணிகிறார்களா? சுவாரசிய தகவல்
உலகக்கோப்பையில் கால்பந்து வீரர்கள் அணியும் வித்தியசமான உடுப்பைப் பற்றிய சுவாரசியமான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகள் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டி உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஆட்டத்திற்கு உள்ளேயும், வெளியேவும் பல வகையில் பூர்த்தி செய்து வருகிறது.
தென் கொரியா மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான குரூப் ஸ்டேஜ் போட்டியின் போது, தென் கொரிய அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ஹ்வாங் ஹீ சானின் (Hwang Hee Chan) புகைப்படங்கள், பெண்களுக்கான ஸ்போர்ட்ஸ் உள்ளாடையை அணிந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
வழக்கமான கால்பந்து ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இத்தகைய உடையில் விளையாடும் வீரர்களைக் கண்டு ஆச்சரியப்பட மாட்டார்கள். ஆனால், வழக்கமான ரசிகர்கள் அல்லாதவர்கள் ஹீ சான் அணிந்திருந்ததைக் கண்டு குழப்பமடையக்கூடும்.
AP
உலகெங்கிலும் உள்ள கால்பந்து வீரர்கள் பொதுவாக அணியும் அத்தகைய உடையைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்களுக்கான ஸ்போர்ட்ஸ் ப்ரா போல தோற்றமளிக்கும் இந்த உடுப்பு உண்மையில் ஒரு ஜிபிஎஸ் டிராக்கர் உடையாகக் கருதப்படுகிறது. இது ஜெர்சிக்கு உள்ளே அணியக்கூடியது, அதனுடன் ஜிபிஎஸ் சாதனம் இணைக்கப்பட்டிருக்கும்.
இது தனிப்பட்ட வீரரின் ஜிபிஎஸ் தரவைச் சேகரிக்க பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சாதனம் ஜிபிஎஸ் டிராக்கர் உடுப்பின் பின்புறத்தில் ஒரு சிறிய பையில் வைக்கப்படுகிறது.