அறுவை சிகிச்சையின் போது உலகக் கோப்பை போட்டியை பார்த்த கால்பந்து ரசிகர்! வைரல் புகைப்படம்
மருத்துவமனையில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரத்திலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பார்த்து கொண்டிருந்த நபர் கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
போலந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, FIFA உலகக் கோப்பை 2022 போட்டியை டிவி திரையில் பார்க்கும் நபரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் FIFA உலகக் கோப்பை திருவிழா களைக்கட்டியுள்ள நிலையில், கால்பந்து ரசிகர்கள் ஆட்டங்களில் மூழ்கியுள்ளனர். அவர்கள் எந்த ஒரு போட்டியையும் தவறவிடாமல் பார்க்க முயற்சி செய்கிறார்கள்.
அப்படி ஒரு தீவிர கால்பந்து ரசிகர் கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஏனெனில் அவர் முதுகுத்தண்டில் மறுத்துப்போகும் மருந்து செலுத்தப்பட்டு (ஸ்பைனல் அனஸ்தீசியா) ருவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் உலகக்கோப்பை போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார்.
போலந்தில் Kielce நகரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை SP ZOZ MSWiA இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
நவம்பர் 25 அன்று அந்த நபர் தனது "கீழ் பகுதிகளில்" அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்று வேல்ஸுக்கும் ஈரானுக்கும் இடையிலான போட்டி இருந்த நிலையில், அந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர், விளையாட்டைப் பார்க்கலாமா என்று மருத்துவர்களிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு ஸ்பைனல் அனஸ்தீசியா கொடுத்த பிறகு, ஆபரேஷன் தியேட்டரின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் உலகக் கோப்பையைப் பார்க்க மருத்துவர்கள் அனுமதித்தனர்.
மூன்று மணி நேரம் வரை நீடித்த அறுவை சிகிச்சையில், வேல்ஸ் அணி தோற்கடிக்கப்படுவதைக் காண அவருக்கு போதுமான நேரத்தை வழங்கியது.
இந்த புகைப்படத்தை போலந்து மருத்துவமனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது, அது வைரலானது.
A man in Poland continued watching the World Cup even while having an operation under spinal anaesthesia.
— Notes from Poland ?? (@notesfrompoland) November 27, 2022
The picture was shared by the hospital treating him, SP ZOZ MSWiA in Kielce. pic.twitter.com/dRhCZXvOQQ