உலகக் கோப்பை கால்பந்து: 1-4 என்ற கோல் கணக்கில் நார்வேவை வீழ்த்திய பிரான்ஸ்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நார்வே அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பிரான்ஸ் - நார்வே மோதல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நார்வே மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.
போஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பிரான்ஸ் அணி தன்னுடைய ஆதிக்கத்தை காட்டத் தொடங்கியது.

ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஒளஸ்மேன் டெம்பெலே உதவி செய்ய எம்பாப்பே பிரான்ஸ் அணிக்கான முதல் கோலை அடித்து தொடங்கி வைத்தார்.
பின்னர் போட்டியில் 20 வது நிமிடத்தில் ஒளஸ்மேன் டெம்பெலே கோல் அடிக்க பிரான்ஸ் அணி 0-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இருப்பினும் நார்வே அணி விடாமல் போராடிய நிலையில் 21வது நிமிடத்தில் நார்வே கால்பந்து அணியின் வீரர் ஆண்ட்ரியஸ் ஸ்கெல்டெரப் உதவியில் தெலோ அசர்கார்டு முதல் கோலை அடித்து 1-2 என்ற கணக்கை தொடங்கி வைத்தார்.
ஆனால் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் 32 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் டெம்பேலே மீண்டும் ஒரு கோலை அடித்து 1-3 என்ற கணக்கில் முதல் பாதியை முடித்து வைத்தார்.
இரண்டாவது பாதியிலும் தொடர்ந்த ஆதிக்கம்

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் அணி தன்னுடைய ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஆட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் அணி வீரர் டிசெய்ர் டெள கோல் அடிக்க கோல் 1-4 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.
இறுதியில் 1-4 என்ற கோல் கணக்கில் நார்வே அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |