வலதுசாரி தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: ஜேர்மனியில் இருவர் அதிரடி கைது
ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் இருவர் கைது
ஜேர்மனியில் Letzte Verteidigungswelle என்ற தீவிர வலதுசாரி அமைப்புக்கு ஆதரவளித்து வந்ததாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு பேரை பொலிஸார் வெள்ளிக்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஷோல்ன் நகரில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தீ வைப்பு முயற்சியை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி, சந்தேக நபர்கள் இருவரும் அகதிகள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பட்டாசுகளை உள்ளே வீசி தீ வைக்க முயற்சித்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, குற்றவாளிகளின் முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, இதில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை முயற்சி, மரணத்தை விளைவிக்கும் வகையிலான தீ வைப்பு முயற்சி, கூட்டுச் சதி ஆகிய மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாக கார்ல்ஸ்ரூவில் உள்ள மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழங்கிய தகவலின் படி தெரியவந்துள்ளது.
இருவரும் ஜேர்மனியின் துரிஞ்சியா(Thuringia) மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அத்துடன் இருவரும் விசாரணை முடியும் வரை சிறைக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |