இஸ்ரேல் - லெபனான் இடையே புதிய அமைதி கட்டமைப்பு: அமெரிக்கா அறிவிப்பு
இஸ்ரேல் - லெபனான் இடையே நிலவி வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அமெரிக்கா அமைதிக்கான புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய அமைதி ஒப்பந்த கட்டமைப்பு
மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகளுடன் இஸ்ரேல் லெபனான் இடையே புதிய அமைதி ஒப்பந்த கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற தீவிர ஆலோசனைகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரூபியோ, அமெரிக்காவின் ஆதரவு மற்றும் மத்தியஸ்த முயற்சிகளுடன் இஸ்ரேல் - லெபனான் இடையே அமைதி கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம் என்று அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இரண்டு தரப்பிற்கும் இடையே நீண்ட கால பதற்றம் மற்றும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தொடக்க புள்ளி என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ராஜதந்திர முயற்சி, ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.
மார்ச் 2ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |