நாட்டின் ஒட்டுமொத்த துயரத்தையும் மறக்கடித்த FIFA உலகக்கோப்பை! மெஸ்ஸியிடமிருந்து அதிர்ஷ்டத்தை நம்பும் மக்கள்
FIFA உலகக் கோப்பை கொண்டாட்டம் அர்ஜென்டினாவின் பணவீக்க துயரத்தை தற்காலிகமாக மறக்கடித்து மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
துயரத்தை மறந்து மக்கள் உற்சாகம்
அர்ஜென்டினாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் புகழ்பெற்ற கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் தலைமையில் அதன் கால்பந்து அணி வெற்றி பெற்றதன் விளைவாக ஒட்டுமொத்த நாடும் உற்சாகமாக உள்ளது.
அர்ஜென்டினாவின் மூன்றாவது உலக சாம்பியன் பட்டத்தை 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெல்லும் கனவுடன் இருக்கும் நாட்டு மக்கள், குறைந்த பட்சம் இப்போதைக்கு அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்துவிட்டு கொண்டாடிவருகின்றனர் என்று கூறலாம்.
Getty Images; Reuters
மூன்றாவது சாம்பியன்ஷிப் நட்சத்திரம்- மக்களின் நம்பிக்கை
மெஸ்ஸியும் அவரது அணியினரும் தங்கள் நீலம் மற்றும் வெள்ளை ஜெர்சியில் மூன்றாவது சாம்பியன்ஷிப் நட்சத்திரத்தை பொறிக்க விரும்புகிறார்கள் என்பது மட்டுமல்லாமல், அந்த மூன்று என்ற எண்ணும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தென் அமெரிக்க நாட்டான அர்ஜென்டினாவின் பொருளாதாரம் பணவீக்கத்தால் பாதிக்கப்படும் என்று பலர் நம்பும் நேரத்தில், உலகக்கோப்பையில் நாட்டுக்கான மூன்றாவது இலக்க வெற்றியானது நாட்டுக்கு மகிமை கொண்டுவருவரும் என மக்களிடையே பெரும் நம்பிக்கை இருக்கிறது.
ஏனெனில், பொதுவாகவே 3 இழக்க எண்களில் அர்ஜென்டினா மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல், தங்கள் நாட்டுக்கு 2 இலக்க எண்களில் தான் பணவீக்கம் போன்ற பெரிய துயர சம்பவங்கள் ஏற்படுவதை அவர்கள் கண்டுள்ளனர்.
im literally crying argentina is the most beautiful country in the world pic.twitter.com/LXaZ4wq3dP
— cami ?? (@starkovsummoner) December 14, 2022
இந்நிலையில், வறுமை 40 சதவீதத்துக்கு மேல் இருக்கும் ஒரு நாட்டில் மில்லியன் கணக்கானவர்களின் துன்பத்தை மெஸ்ஸியின் மந்திரமும், கால்பந்து வெற்றியும் குறைக்கும் என்று ஒரு உண்மையான நம்பிக்கை உள்ளது.
@IMAGO/La Nacion