உலகக்கோப்பையில் இனி விளையாடமாட்டேன்! தோல்விக்குப்பின் சூசகமாக கூறிய நெய்மர்
கத்தாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 போட்டியில், காலிறுதியில் தோல்வியடைந்த பிறகு நெய்மர் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார்.
உலகக்கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என 'உத்தரவாதம் இல்லை' என கூறி, சர்வதேச கால்பந்தில் இருந்து விலகலாம் என்று பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் சூசகமாக கூறியுள்ளார்.
கத்தாரில் வெள்ளிக்கிழமை இரவு எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசில், குரோஷியா அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
காலிறுதியில் பிரேசில் தோல்வி
ஆட்டத்தில் 105-வைத்து நிமிடத்தில் அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார் நெய்மர். இது சர்வதேச போட்டிகளில் பிரேசில் அணிக்காக அவர் அடித்த 77-வது கோல் ஆகும்.
GettyImages
ஆனால், 117வது நிமிடத்தில் புருனோ பெட்கோவிச் குரோஷியா அணிக்காக கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். பின்னர், 30 நிமிடம் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையிலும், இறுதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் நின்றன.
இதனால் போட்டியின் வெற்றியை முடிவு செய்வதற்காக பெனால்டி ஷூட் அவுட் முறையில், இரு அணிகளும் ஐந்து வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், அதில் பிரேசில் அணி 2 வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டது, மறுபுறம் குரோஷியா அணி 4 வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி கோல் அடித்தது.
இறுதியில், பெனால்டி ஷூட் அவுட் முறையின் மூலம் குரோஷிய அணியிடம் 4-2 என்ற வித்தியாசத்தில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
எனக்கும் அணிக்கும் எது சரியானது என்பதை சிந்திக்க வேண்டும்
கடுமையான தோல்விக்கு பிறகு கண்ணீர்விட்டு கதறி அழுத்த நெய்மர், பின்னர் செய்த்யாளர்களிடம் பேசுகையில், அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகலாம் என்று பரிந்துரைத்தார்.
"நான் தேசிய அணியில் எந்த கதவுகளையும் மூடவில்லை, ஆனால் நான் திரும்பவும் விளையாடுவேன் என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதமும் அளிக்கவில்லை" என்று நெய்மர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
GettyImages
மேலும், "நான் எனக்கும் தேசிய அணிக்கும் எது சரியானது என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்." என்று விரக்தியாக பேசினார்.