FIFA உலகக்கோப்பை திட்டங்களில் உயிரிழந்த 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: கத்தார் பகிரங்க ஒப்புதல்
FIFA உலகக் கோப்பை திட்டங்களில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்ததை கத்தார் ஒப்புக்கொள்கிறது.
உலகக் கோப்பை தொடர்பான திட்டங்களில் 400 முதல் 500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என்று FIFA உலகக் கோப்பை வழங்குவதற்குப் பொறுப்பான கத்தார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரித்தானிய பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுடன் ஒரு நேர்காணலில், உலகக் கோப்பைத் தலைவரும், டெலிவரி மற்றும் மரபுக்கான உச்சக் குழுவின் பொதுச் செயலாளருமான ஹசன் அல்-தவாடி (Hassan al-Thawadi) ஒப்புக்கொண்டார்.
MEO
இருப்பினும், அது இன்னும் விவாதிக்கப்படுவதால், துல்லியமான இறப்பு எண்ணிக்கையை அவர் வழங்கவில்லை. “மதிப்பீடு சுமார் 400, 400 முதல் 500 வரை இருக்கலாம், என்னிடம் சரியான எண்ணிக்கை இல்லை.." என்று அல்-தவாதி கூறினார்.
2014-ஆம் ஆண்டில் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் தொடங்கியதில் இருந்து தொழிலாளர்களிடையே மூன்று வேலை தொடர்பான இறப்புகள் மற்றும் 37 வேலை அல்லாத இறப்புகள் மட்டுமே இருப்பதாக Supreme Committee முன்பு கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கார்டியன் அறிக்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உலகக்கோப்பை உள்கட்டமைப்பைத் தயாரிக்கும் போது இறந்ததாகக் கூறியது.
World Cup boss Hassan Al-Thawadi tells Piers Morgan 400-500 migrant workers have died as a result of work done on projects connected to the tournament.
— Piers Morgan Uncensored (@PiersUncensored) November 28, 2022
"Yes, improvements have to happen."@piersmorgan | @TalkTV | #PMUQatar pic.twitter.com/Cf9bgKCFZe
கத்தார் தன்னை sportswash (தவறான செயல்களால் கெட்டுப்போன நற்பெயரை மேம்படுத்த விளையாட்டைப் பயன்படுத்துவது) செய்ய உலகக்கோப்பையை பயன்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்காக கிட்டத்தட்ட 220 பில்லியன் டொலர் செலவழித்து மைதானங்கள் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை அடித்தளத்தில் இருந்து உருவாக்க முயற்சித்துள்ளது.
கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இருப்பினும், FIFA அந்த எதிர்ப்புகளை முளையிலேயே துடைத்து எரிந்ததாக கூறப்படுகிறது.GettyImages