மரண தண்டனை விதிக்கப்படலாம்! கத்தார் உலகக் கோப்பையில் கவர்ச்சி ஆடை அணிந்த இங்கிலாந்து ரசிகைக்கு எச்சரிக்கை
கத்தார் உலகக் கோப்பையை காண வந்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த நடிகை ஆஸ்ட்ரிட் வெட் மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்ததற்காக ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.
ஆடையால் எழுந்த விமர்சனம்
ஆஸ்ட்ரிட் வெட் ஆபாச பட நடிகை ஆவார். இவர் கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்க கத்தாருக்கு வந்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று அர்ஜென்டினா -அவுஸ்திரேலியா போட்டியின் போது பிகினி மேலாடை மற்றும் குட்டை பாவாடை அணிந்தபடி மைதானத்தில் இருந்தார்.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஆஸ்ட்ரிட் மத்திய கிழக்கின் கலாச்சாரத்தை மதித்து பின்பற்ற வேண்டும். இது இங்கிலாந்து கிடையாது..! கத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Astrid Wett/twitter
கலாச்சாரத்தை மதிக்கவும்
மற்றொரு நாட்டு விதிகள் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கவும். இது போன்ற ஆபாசமான ஆடைகளை அணிந்தபடி இருந்தால் இங்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கும் வகையில் விமர்சித்துள்ளனர்.
இது குறித்து கோபத்துடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆஸ்ட்ரிட், என் தலையை துண்டிக்க போவதில்லை, மரியாதையுடன் இருங்கள், இந்த நாடு அழகாக இருக்கிறது, நமது ஊடகத்தை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
WTF? i’m not going to beheaded be respectful, this country is beautiful i hate our media https://t.co/8LaIXPKmdm
— Astrid Wett (@AstridWett) December 4, 2022