FIFA உலகக்கோப்பையில் மோசமாக தோற்ற முக்கிய அணி! அதை கொண்டாடிய அந்நாட்டு மக்கள் வீடியோ
கத்தார் உலக கோப்பை போட்டியில் அமெரிக்க அணியிடம் ஈரான் அணி தோற்றதை அந்நாட்டு மக்களே ஆரவாரமாக கொண்டாடி தீர்த்துள்ளனர்.
ஈரானில் தொடர் போராட்டம்
பெண்கள் ஆடை சுதந்திரத்திற்கு எதிரான கட்டுபாடுகளை எதிர்த்து ஈரானில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அதிலும் மிக முக்கியமாக, ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் Mahsa Amini என்ற பெண் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் கட்டுப்பாட்டிலிருந்தபோதே அவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவரின் மரணத்திற்கு நீதி வேண்டி அரசுக்கெதிராக நடத்தப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தில், மக்கள்மீது தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு நடத்திவருகின்றன அரசு படைகள். இதில் குழந்தைகள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுவரையில் உயிரிழந்திருக்கின்றனர்.
Iran is a country where people are very passionate about football. Now they are out in the streets in the city of Sanandaj & celebrate the loss of their football team against US.
— Masih Alinejad ?️ (@AlinejadMasih) November 29, 2022
They don’t want the government use sport to normalize its murderous regime.pic.twitter.com/EMh8mREsQn pic.twitter.com/MqpxQZqT20
சொந்த நாட்டின் தோல்வியை கொண்டாடும் மக்கள்
இந்த சூழலில் தான் ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணி கத்தாருக்கு சென்று உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளது. உலகக்கோப்பை போட்டியில் அமெரிக்காவுக்கெதிரான ஆட்டத்தில், 1-0 என்ற கணக்கில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஈரான் தோல்வியுற்றதை, ஆட்டம் பாட்டத்தோடு அந்நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுடனான தோல்வியையடுத்து ஈரான் உலக கோப்பையில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
Iranians in #Tehran celebrate Iran's defeat in the match vs the U.S. #OpIran #Iran #IranProtest #IranProtests #IranProtests2022 #IranRevolution #IranRevolution2022 #MahsaAmini #WorldCup #USA #teammelli #usasoccer pic.twitter.com/QxPJRr7tcD
— Lisa Daftari (@LisaDaftari) November 30, 2022