நாட்டில் கொரோனா 5வது அலை தொடங்கிவிட்டது! குடிமக்களுக்கு பிரபல நாடு எச்சரிக்கை
ஒமிக்ரான் மாறுபாட்டால் இஸ்ரேலில் கொரோனாவின் ஐந்தாவது அலை தொடங்கிவிட்டது என அந்நாட்டு பிரதமர் Naftali Bennett எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டி.வி-யில் உரையாற்றிய Naftali Bennett, 3 வாரங்களுக்கு முன்பு இஸ்ரேலில் புதிய அலை (ஒமிக்ரான் அலை) வரப்போகிறது என மக்களை எச்சரித்திருந்தேன்.
ஒரு நாள் கழித்து, கொரோனா அமைச்சரவை கூடியது, வெளிநாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைவதைத் தடுக்க நாங்கள் முடிவு செய்தோம்.
தற்போது நமக்கான நேரம் முடிந்துவிட்டது. ஒமிக்ரான் ஏற்கனவே நாட்டில் உள்ளது, அது வேகமாக பரவிவருகிறது.
முடிந்தவரை கல்வி மற்றும் பொருளாதார செயல்பாடுகளை தொடர்ந்த படி இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம்.
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் மற்றும் தங்களுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என Naftali Bennett கோரியுள்ளார்.
இஸ்ரேலில் தற்போர் 134 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது மற்றும் 307 பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.