வல்லரசு நாட்டுடன் போர்... 800,000 குடிமக்கள் பதிவு செய்ததாக அறிவித்த வடகொரியா
அமெரிக்காவுடன் ஒரு பேர் ஏற்பட்டால், நாட்டுக்காக களமிறங்க 800,000 குடிமக்கள் பதிவு செய்திருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.
களமிறங்க தயார்
சாதாரண ஊழியர்களும் மாணவர்களும் அமெரிக்காவுக்கு எதிராக, வடகொரியாவுக்கு ஆதரவாக களமிறங்க தயார் என தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
@reuters
இளம் சமுதாயத்தினரின் அதிகரிக்கும் இந்த ஆர்வம், வடகொரியாவை மொத்தமாக அழிக்க திட்டமிட்டுவரும் போர் வெறி பிடித்த நாட்டுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடி தரும் வகையில், வடகொரியா தங்களின் Hwasong-17 ஏவுகணை சோதனையை முன்னெடுத்தது.
ஏவுகணை சோதனை
கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே கடலுக்குள் Hwasong-17 ஏவுகணை சோதனையை முன்னெடுத்தது. ஆனால் குறித்த ஏவுகணையானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பால் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால், தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
@reuters
இந்த நிலையில், 11 நாட்கள் நீளும் கூட்டு ராணுவ பயிற்சியானது திங்களன்று துவங்க உள்ளது. 2017க்கு பின்னர் மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சி இதுவென கூறப்படுகிறது.
ஆனால் கொரியா தீபகற்பத்தில் போர் சூழலை உருவாக்கும் முயற்சி இதுவென வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.