உக்ரைன்-ரஷ்யா வீரர்கள் இடையே நடந்த கடுமையான தாக்குதல்: பதறவைக்கும் சண்டைக்காட்சிகள்
உக்ரைனின் தலைநகர் கீவ்க்கு அருகிலுள்ள ப்ரோவர்ஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய ராணுவத்திருக்கும், உக்ரைன் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற தாக்குதல் சண்டைக்காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தொடங்கிய போர் தாக்குதல் மூன்றாம் வாரத்தை எட்டியிருக்கும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் உச்சத்தை தொட்டு வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய ராணுவம் தற்போது தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்துள்ள தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
Бой в ?Броварском районе.
— ⚡️Спутник News АТО ?? (@SputnikATO) March 10, 2022
ВСУ демонстрирует, как должны воевать профессионалы ? pic.twitter.com/QGcrKluO2Y
மூன்றுவாரத்திற்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்ய ராணுவத்திடம் தலைநகர் கீவ்வை தொடர்ந்து பாதுகாக்கும் முயற்சியில் உக்ரைன் ராணுவமும் முழுமூச்சில் தடுப்பு தாக்குதலை நடத்திவருகிறது.
இந்த நிலையில், தலைநகர் கீவ்விற்கு அருகிலுள்ள ப்ரோவர்ஸ்கி Brovarsky மாவட்டத்தின் மிகநீளமான பொதுப்போக்குவரத்து சாலையில் இருநாட்டு வீரர்களும் டாங்கிகள் மற்றும் வான்வழி தாக்குதல் ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக சண்டையிட்டு கொண்டுள்ளனர்.
இதில் இருநாடுகளை சேர்ந்த படைவீரர்கள், டாங்கிகள், மற்றும் வாகனங்கள் போன்றவை அழிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த எந்தவொரு பாதிப்பு கணக்குகளையும் ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளும் இதுவரை வெளியிடவில்லை.
ஆனால், இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.