திருமணத்தில் யார் முதலில் தாலி கட்டுவது? கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம்... வெளியான அதிர்ச்சி வீடியோ
தமிழகத்தில் முருகன் கோவிலில் திருமணத்தில் யார் முதலில் தாலி காட்டிக்கொள்வது என்பதில் இருவீட்டாரிடையே மோதல் ஏற்பட்டு மாறி மாறி தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரவாமல் தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் வழிப்பாட்டு தளங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடி மாதம் முடிந்து இன்று முதல் முகுர்த்த நாள் என்பதால் குன்றத்தூர் முருகன் கோவிலில் இன்று 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
ஒரு ஒரு ஜோடிக்கும் 15 நிமிடங்களில் திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது. கோவிலில் நடந்த திருமணத்தின் போது கூட்டநெரிசலில் யார் முதலில் கோவிலுக்குள் சென்று தாலி கட்டிக்கொள்வது என்ற பிரச்சனையால் இரு மணமக்கள் வீட்டாரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
யார் முதலில் தாலி கட்டுவது?
— Sun News (@sunnewstamil) August 20, 2021
குன்றத்தூரில் கும்மியடித்த திருமண கோஷ்டிகள்!#SunNews | #Marriage | #Clash pic.twitter.com/G6gcS8UpYB
இதில் கோவில் வளாகத்துக்குள்ளையே ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.
இதனிடையே இந்த திருமணங்களில் பொதுமக்கள் யாரும் சமுக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பின்னர் கோவிலுக்கு வந்த பொலிசார் மக்களை வெளியேற்றிவிட்டு கோவில் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள்.
மணமக்கள் வீட்டார் தாக்கி கொண்ட வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.