உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்காக முன்னணியில் போரிடுவதற்காக உக்ரைனுக்குள் நுழைய ஆயிரக்கணக்கான வட கொரிய வீரர்கள் தயார் நிலையில் இருப்பதகா தகவல் கசிந்துள்ளது.
100,000 க்கும் மேற்பட்ட
முன்னதாக, கிம் ஜோங் உன் உக்ரைனின் குர்ஸ்க் பிராந்தியத்திற்கு படைகளை அனுப்பியிருந்தார், அவர்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் தீவிரமாக போரிட்டதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இராணுவ நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலில், 100,000 க்கும் மேற்பட்ட வட கொரிய மக்கள் எந்த நேரத்திலும் உக்ரைனுக்குச் செல்லத் தயாராக உள்ளனர். ரஷ்ய தரப்பில் இருந்து அழைப்பு வரும் வரையில் காத்திருப்பதாக அந்த நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய இராணுவ நிபுணரும் இதே கருத்தை உறுதி செய்துள்ளார். வட கொரியாவில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் வீரர்கள் களமிறங்க இருப்பதாகவும், இது ரஷ்யாவிற்கு வலு சேர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, குர்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்ற வட கொரிய வீரர்களின் பங்கு மிகப்பெரியது என்றும் ரஷ்ய இராணுவ நிபுணர் பாராட்டியுள்ளார். ஆனால், வட கொரிய வீரர்கள் ரஷ்ய பிரதேசத்தில் மட்டுமே போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும்,
தாங்க முடியாத துயரம்
எதிர்காலத்தில் அவர்கள் ரஷ்ய மாகாண எல்லையான குர்ஸ்க், பெல்கோரோட், பிரையன்ஸ்க் பகுதிகளைப் பாதுகாக்க போர் சேவையை மேற்கொள்ள முடியும் என்றார். மிக சமீபத்தில், ரஷ்யாவுக்காகப் போராடும்போது கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களுக்கு கிம் ஜோங் உன் அஞ்சலி செலுத்தினார்.
வட கொரிய வீரர்களின் இழப்பு தாங்க முடியாத துயரம் என்றும் கிம் குறிப்பிட்டிருந்தார். மட்டுமின்றி, ரஷ்யா-உக்ரைன் போரின் போது ரஷ்யாவுக்காகப் போராடிய ஒரு பிரிவின் இராணுவ அதிகாரிகளையும் வட கொரியத் தலைவர் சந்தித்தார்.
இந்த நிலையிலேயே, அதிரடி முடிவாக, மேலும் 100,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை வட கொரியா முன்னெடுத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து அழைப்பு வரும் வரையில் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |