தண்ணீருக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்! பதைபதைக்கும் சம்பவம்... புகைப்படங்கள்
மியான்மரில் போர் விமானம் ஒன்று ஏரிக்குள் விழுந்து மொறுங்கியதில் விமானி உயிரிழந்தார்.
Sagaing நகரின் வடக்கு பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. மியான்மர் ராணுவத்திற்கும் ராணுவ ஆட்சிக்கு எதிரான படைகளுக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வரும் பகுதி தான் இந்த விபத்து நடந்த சரியான இடமாகும்.
அதன்படி அண்டை நாடான மாண்டலே பிராந்தியத்தில் உள்ள தடா-யுவில் உள்ள இராணுவ விமானத் தளத்துடன் நேற்று காலை 10:43 மணிக்கு தனது பயிற்சியை தொடங்கிய போது ஜெட் விமானம் தொடர்பை இழந்தது.
A Myanmar military jet crashed east of Ohn Taw village in Sagaing region Wednesday morning while flying in the country’s north.
— Naga Hills (@Hillsnaga) February 16, 2022
Details: https://t.co/lmcCg504Bv pic.twitter.com/gshJtE69vl
பின்னர் ஏரிக்குள் விழுந்து நொறுங்கியிருக்கிறது. விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மொடலாகும்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.