உக்ரைனுக்கான போர் விமானங்கள்…ஆனால் இது மட்டும் நடந்துவிட கூடாது! ஜனாதிபதி மக்ரோன் எச்சரிக்கை
உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்கும் யோசனை இன்னும் விலக்கப்படவில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்களன்று தெரிவித்துள்ளார்.
யோசனைகள் விலக்கப்படவில்லை
ரஷ்யாவுடன் போரில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்று அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகள் டாங்கிகள் மற்றும் பிற ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையில் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவது தொடர்பாக பல்வேறு நாடுகள் ஆலோசனை செய்து வரும் நிலையில், ஜேர்மனி நேற்று உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது.
Even #Macron did not rule out the possibility of supplying fighter jets to #Ukraine.#France believes that the main thing is that the weapons supplied to #Ukraine should not be used to strike #Russian territory. pic.twitter.com/WYBoCVIr1W
— NEXTA (@nexta_tv) January 30, 2023
இந்நிலையில் டச்சு பிரதமர் மார்க் ரூட்டுடனான (Mark Rutte) பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் உக்ரைனுக்கு ஜெட் விமானங்கள் அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கேட்கப்பட்ட போது, ஆலோசனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் "கொள்கையில் எதுவும் விலக்கப்படவில்லை," என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்குவதற்கு முன் அதற்கான அளவுகோலையும் ஜனாதிபதி மக்ரோன் முன்வைத்துள்ளார்.
அதில், முதலில் உக்ரைன் ஆயுதங்கள் தேவை குறித்து கோரிக்கையை முன் வைக்க வேண்டும், பின் இவ்வாறு வழங்கப்படும் ஆயுதங்கள் ரஷ்ய மண்ணை தாக்க கூடாது மாறாக இந்த ஆயுதங்கள் முற்றிலும் எதிர்ப்பு முயற்சிக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
AFP/Getty Images
அத்துடன் எந்தவொரு ஆயுத விநியோகமும் பிரான்ஸ் ஆயுதப் படைகளின் திறனை பலவீனப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.
F-16 ஜெட் விமானங்கள்
சமீபத்தில் டச்சு அரசியல்வாதிகள் உக்ரைனுக்கு F-16 ஜெட் விமானங்களை அனுப்பும் யோசனையை வெளியிட்டு இருந்தனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் பேச்சுவார்த்தைக்கு பிறகு டச்சு பிரதமர் மார்க் ரூட்டே வெளியிட்ட தகவலில், போர் ஆயுதங்கள் வழங்குவதில் எந்த தடையும் இல்லை ஆனால் இது ஒரு பெரிய முடிவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் F-16 போர் விமானங்கள் குறித்து எந்த கேள்வியும் இல்லை, இருப்பினும் உக்ரைனிடம் இருந்து இதுவரை எந்த கோரிக்கையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய துருப்புகளுடன் போராடுவதற்கு மேற்கத்திய நாடுகள் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்ப வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்து இருந்தார்.