ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் பிரபல ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு: பண்ணை நிர்வாகம் விளக்கம்
Filmmaker dies after giraffe attack in South Africa: வனவிலங்கு பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி தாக்கியதில் பிரபல புகைப்பட ஒளிப்பதிவாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரபல புகைப்பட ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு
தென் ஆப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் நடந்த படப்பிடிப்பின் போது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து பகுதி தாக்கியதில் விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் கார்லோஸ் கார்வாலியோ(Carlos Carvalho) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற வைல்ட் அட் ஹார்ட்(Wild at Heart) என்ற தொலைக்காட்சித் தொடருக்காக தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற கிளென் ஆஃப்ரிக்க்(Glen Afric) பண்ணையில் படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஜெரால்ட்(Gerald) என்ற பெயர் கொண்ட ஒட்டகச்சிவிங்கி தன்னுடைய கழுத்தினால் தாக்கியதில் 47 வயது கார்லோஸ் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது காற்றில் தூக்கி வீசப்பட்ட கார்லோஸ் பலத்த காயங்களுடன் ஜோகன்னஸ்பர்க் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டகச்சிவிங்கியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய நிர்வாகம்

இந்த சம்பவத்தின் போது ஜெரால்ட் என்ற ஒட்டகச்சிவிங்கி இயற்கையான முறையில் மட்டுமே நடந்து கொண்டதாகவும் அதனால் அதற்கு எந்தவொரு தண்டனையும் அளிக்கப்படாது என்று பண்ணை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜெரால்ட் ஒட்டகச்சிவிங்கி எந்த விதத்திலும் ஆபத்தான விலங்கு இல்லை என்றும் பண்ணை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |