நாளை கருணைக்கொலை செய்யப்படவிருக்கும் இளம்பெண்: பகீர் பின்னணி
ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணொருவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, நாளை அவர் கருணைக்கொலை செய்யப்பட உள்ளார்.
அவரது கதையைக் கேட்டால், அது கல்மனமும் கரையும் விதத்தில் அமைந்துள்ளது.
கருணைக்கொலை செய்யப்படவிருக்கும் இளம்பெண்
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவைச் சேர்ந்தவர் ராமோஸ் (Noelia Castillo Ramos, 25) என்னும் இளம்பெண். 2022ஆம் ஆண்டு, அரசு காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த ராமோஸ் கூட்டு வன்கொடுமைக்கு ஆளானார்.

அதனால் கடும் மன பாதிப்புக்குள்ளான அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கட்டிடம் ஒன்றிலிருந்து குதிக்க, அவர் உயிர் பிழைத்துவிட்டார், ஆனால், அவரது உடல், இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டது.
கடும் மனவேதனை அனுபவித்துவந்த ராமோஸின் கோரிக்கையை ஏற்று அவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, நாளை, அதாவது, மார்ச் மாதம் 27ஆம் திகதி, ராமோஸ் கருணைக்கொலை செய்யப்பட உள்ளார்.
கடைசியாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராமோஸ், என் குடும்பத்தில் யாருமே எனது கருணைக்கொலைக்கு ஆதரவாக இல்லை.
காரணம், நான் என் குடும்பத்தின் தூண்களில் ஒன்றாக உள்ளதுதான். ஆனாலும், நான் போகிறேன், நீங்கள் வேதனையுடன் வாழப்போகிறீர்கள்.
ஆனால் யோசித்துப்பாருங்கள், நான் இத்தனை வருடங்களாக அனுபவித்த வேதனையை எண்ணும்போது, நான் என் பாடுகள் நீங்க அமைதியாக கடந்துபோகவே விரும்புகிறேன், அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் ராமோஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |