செப் 1 முதல் மாறும் முக்கிய விதிகள்: நிதி சார்ந்த அன்றாட வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றங்கள்
செப்டம்பர் மாதம் முதல் வங்கி, நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள் மாறவிருக்கின்றன.
புதிய விதிகள்
நிதி தொடர்பில் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், நமது அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிதி விடயத்தில் ஏற்படப் போகிறது.
செப்டம்பர் 2025 முதல் இரண்டு சுற்று விதி மாற்றங்களை SBI Cards அறிவித்துள்ளது. இதன்படி Rewards புள்ளிகள் மாறும் அதே நேரத்தில், CPP வாடிக்கையாளர்கள் சார்ந்த விதிகளும் செப்டம்பர் 16ஆம் திகதி முதல் மாறும்.
இனி குறிப்பிட்ட Card வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 1ஆம் திகதி முதல், சில வகையான பரிவர்த்தனைகளில் Rewards புள்ளிகள் பெறப்படாது.
SBI Card வலைத்தளத்தில் உள்ள புதுப்பிப்பின்படி இந்த இது நடைமுறைப்படுத்தப்படும்.
இதுதொடர்பான SBI Cardயின் வலைத்தள அறிவிப்பில், "செப்டம்பர் 1, 2025 முதல் டிஜிட்டல் விளையாட்டு தளங்கள்/வணிகப் பொருட்கள் மற்றும் அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் செலவிடுவதற்கான Reward புள்ளிகள் பெறுவது Lifestyle Home Centre SBI Card, Lifestyle Home Centre Card SELECT மற்றும் Lifestyle Home Centre SBI Card PRIME ஆகியவற்றுக்கு நிறுத்தப்படும்" என கூறப்பட்டுள்ளது.
அஞ்சல்
அதேபோல், அனைத்து CPP வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 16ஆம் திகதி முதல், அந்தந்த புதுப்பித்தல் காலக்கெடுவின் அடிப்படையில் தானாகவே புதுப்பிக்கப்பட்ட திட்ட வகைகளுக்கு மாற்றப்படுவார்கள்.
அஞ்சல் துறையைப் பொறுத்தவரை, India Post பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் உடன் Speed Postஐ இணைக்கிறது.
இதன்மூலம் Speed Post Letter மற்றும் Speed Post Parcel குறிப்பிட்ட விநியோகத்தை வழங்கும்.
Speed Post துறையின் கீழ் பதிவு செய்வதன் நன்மைகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அனுபவிப்பார்கள். அதே சமயம் அவர்கள் பிரீமியம் Speed Post அம்சங்களையும் அணுகலாம்.
Fixed Deposit
ஒரு சிறப்பு நிலையான வைப்புத்தொகையை (A Special Fixed Deposit) உங்கள் சேமிப்பை அதிகம் பயன்படுத்த பரிசீலிக்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம் என்கிறது இந்த புதிய விதிகள்.
இந்தியன் வங்கி, IDBI வங்கி உட்பட பல வங்கிகள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் வரையறுக்கப்பட்ட கால நிலையான வைப்பு திட்டங்களை வழங்குகின்றன.
444 நாள் மற்றும் 555 நாள் நிலையான வைப்பு நிதிகள் என்ற இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு சிறப்பு விருப்ப திட்டங்கள் செப்டம்பரில் முடிவடைகின்றன.
அதேபோல் IDBI வங்கி வழங்கிய 444, 555 மற்றும் 700 நாள் நிலையான வைப்பு நிதிகள் (Fixed Deposit) திட்டங்களுக்கும் செப்டம்பர்தான் காலக்கெடு.
வருமான வரி தாக்கல்
இதற்கிடையில், நிதி அமைச்சகம் 2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான நீட்டிப்பை அறிவித்துள்ளது.
கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாத வரி செலுத்துவோர் இப்போது செப்டம்பர் 15ஆம் திகதி வரை தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின் அலுவலக குறிப்பாணையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், இப்போது தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதன்படி நீங்கள் தொடர்ந்து மாற முடியாது. UPSயில் (ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்) சேர்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2025 ஆகும். அதேபோல் உங்கள் Jan Dhan கணக்கை சீராக இயங்க வைத்திருக்க வேண்டும்.
முக்கிய சேவை
அத்துடன் உங்களது வங்கியில் இருந்து வரும் re-KYC நினைவூட்டல்களை புறக்கணிக்காமல் இருப்பது முக்கியம்.
ஒரேவேளை நீங்கள் தாமதித்தாலோ அல்லது பதிலளிக்கத் தவறினாலோ, உங்கள் கணக்கு தடை செய்யப்படலாம் - அதாவது நீங்கள் பணத்தை எடுக்கவோ, அரசாங்க மானியங்களைப் பெறவோ அல்லது பிற முக்கிய சேவைகளைப் பயன்படுத்தவோ முடியாமல் போகலாம்.
எனவே, இந்த இடையூறுகளை தவிர்க்க உங்கள் வங்கியின் அறிவிப்பிற்கு சரியான நேரத்தில் பதிலளிக்க வேண்டும் மற்றும் உங்கள் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |