நோட்டோ தொடர்பான இறுதி முடிவை அறிவித்த பின்லாந்து: ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவு
மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணையப்போவதாக தனது இறுதி முடியவை அறிவித்துள்ளது.
உக்ரைன் போரின் எதிரொலியாக ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணையப் போவதாக தெரிவித்து வந்தது.
இதற்கான பொது வாக்கெடுப்புகள் மற்றும் வருங்கால பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்த நாடாளுமன்ற விவாதங்கள் என பலவற்றை இருநாட்டு அரசாங்கங்களும் தீவிரமாக மேற்கொண்டனர்.
VIDEO: The Finnish government officially announces its intention to join NATO. Less than three months after Russia invaded Ukraine on February 24, the move is a stunning reversal of Finland's policy on military non-alignment dating back more than 75 years pic.twitter.com/zdZgWjUTa2
— AFP News Agency (@AFP) May 15, 2022
இந்தநிலையில், கடந்த வெள்ளிகிழமை செய்தியாளர்களை சந்தித்த பின்லாந்து ஜனாதிபதி Sauli Niinisto மற்றும் பிரதமர் Sanna Marin, பின்லாந்து ராணுவ அணிச் சேரா கொள்கையில் இருந்து வெளியேறி, நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவது அவசியமாகிறது என கூட்டாக அறிவித்தனர்.
ஆனால் அதற்கான சில முன்னேற்பாடு நடவடிக்கைகள் மீதம் இருப்பதால் இறுதி முடிவு சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைவது உறுதி என வெளியான அதன் இறுதி முடிவை நாட்டின் ஜனாதிபதி Sauli Niinisto உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த முடிவானது உக்ரைன் போர் மற்றும் கூட்டணியை விரிவுபடுத்துவது பற்றி பேர்லினில் நடைப்பெற்ற நேட்டோ வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது.
மேலும் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பில் இணைவது தொடர்பான விண்ணப்பம் இந்த வாரத்திற்குள் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பின்லாந்து ஜனாதிபதி Sauli Niinisto தெரிவித்துள்ள கருத்தில், "இது ஒரு வரலாற்று நாள், ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது, நோட்டோவில் உறுப்பினர் ஆவது பின்லாந்திற்கு "பெரிய முக்கியத்துவம்" வாய்ந்தது மற்றும் பின்லாந்திற்கு மனரீதியான பாதுகாப்பை தரும் என தெரிவித்துள்ளார்.
அணிச் சேரா கொள்கையில் இருந்து விலகி நோட்டோவில் இணைவது தவறான முடிவு என தெரிவித்த புடினின் எச்சரிக்கை குறித்து பதிலளித்த Sauli Niinisto உக்ரைன் மீதான போர் நடவடிக்கை அனைத்தையும் மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பின்லாந்து பிரதமர் Sanna Marin தெரிவித்த கருத்தில் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் முழு நோர்டிக் பிராந்தியத்தையும் வலுப்படுத்தும் நகர்வு என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மரியுபோல் இரும்பு ஆலை மீது மழையாய் பொழிந்த தீ கனல் குண்டுகள்: அதிர்ச்சி வீடியோ!
நோட்டோவில் இணைவது தொடர்பாக பின்லாந்தின் இந்த இறுதி முடிவை தொடர்ந்து, ஸ்வீடனும் தனது இறுதி முடிவை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.