கூகுள் நிறுவனத்தின் 2 பெரிய டேட்டா சென்டர் பணிகள் நிறுத்தம்: பின்லாந்து அரசு அறிவிப்பு
Finland Halt Google Data Centre Sites: கூகுளின் புதிய டேட்டா சென்டர் பணிகளை பின்லாந்து அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
டேட்டா சென்டர் பணிகள் நிறுத்தம்
பின்லாந்து நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த 2 புதிய டேட்டா சென்டர்களின் கட்டுமானப் பணிகளுக்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.
இந்த புதிய டேட்டா சென்டர்களுக்காக பெருமளவு காடழிப்பு பணிகள் நடைபெறுவதாக எழுந்த பெரும் புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது.
சுமார் 13 பில்லியன் யூரோ மதிப்பில் ஐரோப்பாவில் சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த இரண்டு டேட்டா சென்டர் அமைக்கும் பணிகள், கூகுள் வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது.
முஹோஸ்(Muhos) மற்றும் கஜாணி(Kajaani) ஆகிய பகுதிகளில் 300 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆயத்தப் பணிகள் காடழிப்பு சர்ச்சை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.