இரவு விடுதிக்கு சென்ற பிரதமர்., சர்ச்சையானதால் பகிரங்க மன்னிப்பு!

Photo Finland Apology Sanna Marin Night Club
By Ragavan Dec 09, 2021 06:26 PM GMT
Report

சமீபத்தில் இரவு விடுதிக்கு சென்ற புகைப்படம் இனையத்தில் வெளியாகி சர்ச்சையானதால், பின்லாந்து நாட்டின் பிரதமர் Sanna Marin பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி கைக்கோனன் (Antti Kaikkonen) சனிக்கிழமை இரவு விருந்திற்குச் சென்றார். இது மக்களிடையே விமர்சனத்துக்கு உள்ளது.

அவரைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று பின்லாந்தின் பொருளாதார விவகார அமைச்சர் மிகா லிண்டிலா (Mika Lintila), ஃபின்லாந்து மற்றும் லாட்வியா இடையேயான தரைப்பந்து போட்டியில் கலந்து கொண்டார்.

மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அவர்கள் இவ்வாறு பொது இடத்திற்கு சென்றதால் சர்ச்சையானது. அந்த நிலையில், வெளியுறவு அமைச்சர் Pekka Haavisto கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்பட்டது உறுதியானது.

இவ்வாறு அரசாங்கத்தின் உயரிய பொறுப்பில் உள்ளவர்கள் கட்டுப்பாடுகளை மீறும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் சன்னா மரின் (Sanna Marin), 36, ஒரு இரவு விடுதியில் அவரது புகைப்படம் வெளிவந்து பெரும் சர்ச்சையானது.

இரவு விடுதிக்கு சென்ற பிரதமர்., சர்ச்சையானதால் பகிரங்க மன்னிப்பு! | Finland Pm Sanna Marin Apologises Night Club Photo Photo: Reuters

ஃபின்னிஷ் கிசுகிசு பத்திரிகை ஒன்று, நெரிசலான Helsinki இரவு விடுதியில் மரின் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் கடும் விபர்சனத்துக்கு உள்ளானார்.

அதனைத்தொடர்ந்து, புதன்கிழமை பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். புதன்கிழமை இரவு பொது ஒளிபரப்பாளர் Yle-ன் ரீவி பேட்டியில் பேசிய மரின் "நான் தவறு செய்துவிட்டேன். நான் நிலைமையை இன்னும் கவனமாக பரிசீலித்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

"எனது கணவரும் நானும்... சாப்பிடுவதற்கு வெளியே சென்றிருந்தோம், நகரத்தில் ஷாப்பிங் செய்தோம், நண்பர்களைப் பார்த்தோம், மேலும் மாலை மற்றும் இரவு வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்தோம்" என்று அவர் தனது பேஸ்புக்கில் எழுதினார்.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த போதிலும், கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்கள் தன்னை தனிமைப்படுத்த தேவையில்லை என்று ஒரு அதிகாரி தன்னிடம் கூறியதாக அவர் மேலும் கூறினார்.

இருப்பினும் "நான் சிறந்த முடிவை பயன்படுத்தியிருக்க வேண்டும் மற்றும் எனக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலை இருமுறை சரிபார்த்திருக்க வேண்டும். நான் அதைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்," என்று மரின் எழுதினார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US