அடிப்படை உணவுத்தேவைக்காக ஐரோப்பாவை நாடிய ட்ரம்புக்கு கைவிரிப்பு: எள்ளி நகையாடும் இணையம்
ட்ரம்ப் வரி விதிப்பு என்னும் ஆயுதத்தை வைத்துக்கொண்டு உலக நாடுகளைக் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அவரது செயல்களுக்கு பலன் கிடைக்கத் துவங்கியுள்ளது போல் தெரிகிறது.
ட்ரம்புக்கு கைவிரிப்பு
அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கெல்லாம் வரி விதிப்பது என்னும் திட்டத்துடன் செயல்பட்டுவருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
ஆனால், அப்படிச் செய்வதால் அது அமெரிக்க மக்களையே பாதிக்கும், விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட நேரிடும் என அரசியல் வல்லுநர்கள் ஆரம்பத்திலேயே எச்சரித்தார்கள்.
ட்ரம்ப் கொஞ்சம் கூட அசைந்துகொடுக்கவில்லை. தொடர்ந்து வரி விதிப்பு மிரட்டல்கள் விடுத்துக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் அடிப்படை உணவுப்பொருட்களில் ஒன்றான முட்டையின் விலை எக்கச்சக்கமாக அதிகரித்துவருகிறது.
ஆகவே, விலை உயர்வை சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் உதவியை நாடியுள்ளார் ட்ரம்ப்.
பின்லாந்து மற்றும் டென்மார்க் முதலிய நாடுகளிடம் ட்ரம்ப் முட்டை கேட்க, சரியான நேரம் பார்த்து பதிலடி கொடுத்துள்ளது பின்லாந்து.
Finland turns down US request for eggs | Yle News
byu/redditforcedmesignup ineurope
அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்யமுடியுமா என ட்ரம்ப் கேட்க, அமெரிக்க அதிகாரிகளுடன் சந்தை அணுகுமுறை பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதை காரணம் காட்டி, முட்டை ஏற்றுமதி இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கூறிவிட்டது பின்லாந்து.
மேலும், அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய பின்லாந்துக்கு தேசிய அனுமதியும் இல்லை.
அத்துடன், அமெரிக்காவுக்கு பின்லாந்து முட்டை அனுப்பினாலும், அது அமெரிக்காவின் முட்டை பிரச்சினையை தீர்க்க உதவாது என்று கூறியுள்ள பின்லாந்து கோழிப்பண்ணை கூட்டமைப்பின் இணை இயக்குநரான Veera Lehtilä, எங்களிடம் வெறும் நான்கு மில்லியன் முட்டையிடும் கோழிகள்தான் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
எள்ளி நகையாடும் இணையம்
இதற்கிடையில், ட்ரம்புக்கே NO சொல்லிவிட்ட பின்லாந்தை வியப்புடன் பார்க்கிறது இணையம்.
வரி விதிப்பு, அச்சுறுத்தல் என எல்லாரையும் அவமதிக்கிறார் ட்ரம்ப், ஆனால், சின்ன உள்நாட்டுத் தேவைக்கு இன்னொரு நாட்டிடம் உதவி கேட்கிறார் என்கிறார் ஒருவர்.
அமெரிக்காவில் சிறந்த கோழிகளும், அருமையான முட்டைகளும் கிடைக்கும் என்றல்லவா நினைத்தேன் என கேலியாக கூறுகிறார் மற்றொருவர்.
இன்னொருவரோ, ஒரு பக்கம் வரிகள் மூலம் போர் செய்கிறார் ட்ரம்ப், இன்னொரு பக்கம் முட்டைக்காக கையேந்துகிறார், முதலில் வரிகள் தொடர்பிலான போர் முடியட்டும், அப்புறம் முட்டை பற்றி பேசலாமே என்கிறார்.
ஆக, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்னும் பழமொழி ட்ரம்ப் விடயத்தில் பலிக்கத்துவங்கியுள்ளதோ என எண்ணத்தோன்றுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |