பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளை வரவேற்கிறோம்: நோட்டோ பொதுசெயலாளர் அழைப்பு!
நோட்டோவில் விரைவாக இணைய பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் விருப்பப்பட்டால் நிச்சயமாக இணைந்து கொள்ளலாம் என அதன் பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய தனது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதில் இருந்து, ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்து தங்களின் பாதுகாப்பை மேலும் வலுபடுத்து கொள்வதற்காக மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய போவதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் போன்ற அனைத்திலும் பின்லாந்தின் மிக நெருங்கிய நட்பு நாடான ஸ்வீடனும் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய போவதாக அறிவித்தது.
மேலும் இந்த இருநாடுகளும், மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைவது தொடர்பான இறுதி முடிவை மே மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்போவதாக அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நோட்டோவில் (NATO) விரைவாக இணைய விருப்பபட்டால் கண்டிப்பாக இணைந்து கொள்ளலாம் என நோட்டோ அமைப்பின் பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்(Jens Stoltenberg) தெரிவித்துள்ளார்.
நோட்டாவில் இணைய பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் விண்ணப்பித்தால், அன்புடன் வரவேற்பதாகவும், அதற்கான நடைமுறைகளை விரைவாக நடத்தவும் தயாராக இருப்பதாகவும் பிரஸ்ஸல்ஸில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: புடின் இறந்து போக வேண்டும்... உக்ரைனிய மூதாட்டி விருப்பம் !
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, ரஷ்ய அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது, இவற்றையும் மீறி நோட்டோவில் இணைந்தால் அதன் பால்டிக் பகுதியில் உள்ள கலினின்கிராட்டில் அணுஆயுத ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வந்து தாக்கும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.