47 ஓவரில் 321 ரன் குவித்த ஸ்கொட்லாந்து..திருப்பியடிக்கும் அமெரிக்க அணி
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்கொட்லாந்து 321 ஓட்டங்கள் குவித்தது.
ஃபின்லே, மெக்கல்லன்
கிர்டிபூரில் ஸ்கொட்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
மழை காரணமாக 47 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பாட்டதைத் தொடங்கியது.
முன்சே 20 ஓட்டங்களில் வெளியேற, ஃபின்லே மற்றும் பிரண்டன் மெக்கல்லன் வலுவான கூட்டணி அமைத்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரண்டன் மெக்கல்லன் (Brandon McMullen) 40 பந்துகளில் 55 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினார்.

321 ஓட்டங்கள் குவிப்பு
ஃபின்லே 77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மைக்கேல் இங்கிலிஷ் 32 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ், மார்க் வாட் அதிரடியில் மிரட்டினர். அரைசதம் விளாசிய கிராஸ் 32 பந்துகளில் 58 ஓட்டங்கள் குவித்தார்.
வாட் 13 பந்துகளில் 25 ஓட்டங்களும், மைக்கேல் லீஸ்க் 12 பந்துகளில் 28 ஓட்டங்களும் விளாச, ஸ்கொட்லாந்து அணி 47 ஓவர்களில் 321 ஓட்டங்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்க அணி 26 ஒவர்களில் 160 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. ஸ்மித் பட்டேல் 77 (56) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |