சிக்ஸர் மழை பொழிந்த வீரர்! 53 பந்துகளில் 101 ரன் விளாசல்
பிக் பாஷ் லீக் தொடர் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வீரர் ஃபின் ஆலன் 53 பந்துகளில் 101 ஓட்டங்கள் விளாசினார்.
ஃபின் ஆலன்
டாக்லேண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
Finn Allen hits three sixes in a row, each one bigger than the last! 😱 #BBL15 pic.twitter.com/icslj60jzX
— KFC Big Bash League (@BBL) January 15, 2026
மெல்போர்ன் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்ய, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
மிட்செல் மார்ஷ் (20), கோனொலி (18) ஆகியோர் ஆட்டமிழக்க, ஃபின் ஆலன் (Finn Allen) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், தனது வேகத்தை குறைக்காத ஆலன் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்க ராக்கெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அவர் 53 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
எவன்ஸ் 11 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுக்க, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் 219 ஓட்டங்கள் குவித்தது. சிறப்பாக பந்துவீசிய சாம் எலியட் 4 விக்கெட்டுகளும், டக்கெட், ஜாம்பா மற்றும் சதர்லேண்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
Brutal #PowerSurge hitting 🔥 @originenergy | #BBL15 pic.twitter.com/MKjAce3iSq
— KFC Big Bash League (@BBL) January 15, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |