சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்! 39 பந்துகளில் 69 ரன் விளாசல்
BBL 2025-26 போட்டியில் ஃபின் ஆலன் அதிரடி அரைசதம் விளாச, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மார்கஸ் ஸ்டோய்னிஸ்
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான BBL போட்டி நடந்தது.
50 for Finn Allen!
— KFC Big Bash League (@BBL) January 17, 2026
How well is he hitting them in #BBL15 🤩 pic.twitter.com/V51HUsv0A8
முதலில் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) 55 (39) ஓட்டங்கள் விளாச, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் அந்த அணி 18.2 ஓவர்களில் 130 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளும், பெய்ன் மற்றும் கோனொலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Getty Images
ஹாரிஸ் ராஃப்
பின்னர் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் (12), கோனொலி (2), இங்கிலிஸ் (1) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஹாரிஸ் ராஃப் (Haris Rauf) பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
எனினும் ஃபின் ஆலன் (Finn Allen) சிக்ஸர்மழை பொழிந்தார். அவரது மிரட்டலான துடுப்பாட்டம் மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 39 பந்துகளை எதிர்கொண்ட ஆலன் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் விளாசினார்.

ஆரோன் ஹார்டி (Aaron Hardie) ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுக்க, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 16.5 ஓவர்களில் 134 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளும், பீட்டர் சிடில் (Peter Siddle) ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ரிச்சர்ட்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |