விராட் கோலிக்கு சொந்தமான ஹொட்டல் மீது நடவடிக்கை.., என்ன நடந்தது?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொந்தமான ஹொட்டல் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விராட் கோலியின் ஹொட்டல்
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி கிரிக்கெட்டை தவிர்த்து சில வியாபாரங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் பெங்களூருவில் இருக்கும் ஒன்8 கம்யூன் (One8 Commune) என்ற ஹொட்டலுக்கு இணை உரிமையாளராக உள்ளார்.
இந்த ஹொட்டல் மீது தற்போது பெங்களூரு நகர காவல் துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஹொட்டல் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே ஹொட்டல்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஹொட்டலின் பார் பார் நள்ளிரவு 1 மணியை கடந்தும் இயங்கியதாக கூறப்படுகிறது. இதனால், கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஒன்8 கம்யூன் (One8 Commune) மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹொட்டல் மட்டுமல்லாது பெங்களூருவில் அதிக நேரம் சட்டவிரோதமாக இயங்கி வந்த பார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஒன்8 கம்யூன் (One8 Commune) ஹொட்டல், டெல்லி, மும்பை, பூனே மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |