சென்னை ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: அலறியடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு
சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ரயிலில் தீ விபத்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் மாலை 6.20 மணியளவில் லோக்மான்ய திலக் விரைவு ரயில் மும்யை நோக்கி புறப்பட்டது.
ஆனால் சில நிமிடங்களிலேயே சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே லோக்மான்ய திலக் விரைவு ரயில் சென்று கொண்டு இருந்த போது ரயில் என்ஜின் பின்பக்கத்தில் இருந்து திடீரென தீ பிடித்தது.
Fire broke out suddenly in coach of a moving Chennai-Mumbai LTT express near Basin Bridge station, Chennai around 6:50pm today.
— NK (@nirmal_indian) June 22, 2023
Passengers were seen jumping & running for their lives!#LokmanyaTilakExpress #Chennai #train #firepic.twitter.com/ck6x1ymKX5
இதனால் அதிர்ச்சியடைந்த ரயிலின் லோலோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்தியுள்ளார். அதிகமான புகை வெளியேறுவதை கண்ட ரயில் பயணிகளும் உடனடியாக ரயிலை விட்டு வேகமாக வெளியேறினர்.
இதையடுத்து சிறிது நேரத்திலேயே தீ ஆனது ரயில் என்ஜின் முழுவதும் பரவியது.
தீ விபத்திற்கான காரணம்
இந்நிலையில் தகவலறிந்து வந்த ரயில்வே பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விடாமல் போராடி தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயர் மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக ரயில் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
என்ஜினில் பற்றிய தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து, லோக்மான்ய திலக் விரைவு ரயிலில் புதிய இன்ஜின் மாற்றப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |